×

கேவி ஆனந்த் இயக்கத்தில் ‘கோ’ படத்தில் நடித்துள்ள சிம்பு… இதுவரை யாரும் பார்க்காத புகைப்படங்கள்!

கோ படத்தில் சிம்பு நடித்துள்ள காட்சிகளின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இயக்குனர் கேவி ஆனந்த் இயக்கத்தில் 2011-ம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான ‘கோ’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. கேவி ஆனந்தின் சினிமா பயணத்தின் மிக முக்கியமான படமாகவும் அமைந்தது. ஆனால் ‘கோ’ படத்தில் முதலில் நடித்தது சிம்பு தான். இதை சிம்புவே தெரிவித்திருந்தார். சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் கேவி ஆனந்த் மறைவு கோலிவுட் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியது. அப்போது அவருக்காக இரங்கல்
 

கோ படத்தில் சிம்பு நடித்துள்ள காட்சிகளின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இயக்குனர் கேவி ஆனந்த் இயக்கத்தில் 2011-ம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான ‘கோ’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. கேவி ஆனந்தின் சினிமா பயணத்தின் மிக முக்கியமான படமாகவும் அமைந்தது.

ஆனால் ‘கோ’ படத்தில் முதலில் நடித்தது சிம்பு தான். இதை சிம்புவே தெரிவித்திருந்தார். சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் கேவி ஆனந்த் மறைவு கோலிவுட் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியது.

அப்போது அவருக்காக இரங்கல் தெரிவித்து சிம்பு வெளியிட்டிருந்த அறிக்கையில் “கோ படத்தில் நான் நடித்திருக்க வேண்டியது. அப்போதிருந்த சூழலில் தவிர்க்கும் படியாகிவிட்டது. சமீபத்தில் மிக அருமையான கதை ஒன்றை எனக்குச் சொல்லியிருந்தார். சேர்ந்து படம் பண்ணலாம் எனச் சொல்லியிருந்தேன்.” என்று தெரிவித்திருந்தார்.

தற்போது கோ படத்தில் சிம்பு நடித்துள்ள காட்சிகளின் புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் வெளியாகி வைரலாகி வருகின்றனர்.