2 பாகங்களாக உருவாகும் சிம்பு - வெற்றிமாறன் திரைப்படம்
இயக்குநர் வெற்றிமாறன் - நடிகர் சிம்பு கூட்டணியின் உருவாக உள்ள STR 49 திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாராகிறது.
இயக்குநர் வெற்றிமாறன் சிம்பு கூட்டணியில் உருவாக உள்ள பெயரிடப்படாத STR 49 படத்தை பற்றிய புதிய தகவல்களை இயக்குநர் வெற்றிமாறன் அண்மையில் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில் இந்த திரைப்படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்க வேண்டியதிருக்கும் என தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், STR 49 படத்தின் கதை அமைப்பு ஐந்து முக்கிய எபிசோடுகளை கொண்டிருக்கும். ஒவ்வொன்றும் கதையை முன்னோக்கி நகர்த்துவதில் முக்கியமான பங்களிப்பை கொண்டிருக்கும். இது போன்ற அடுக்கு அணுகுமுறையிலான காட்சிப்படுத்தல். பார்வையாளர்களுக்கு தீவிரமான மற்றும் ஆழமான சினிமா அனுபவத்தை வழங்கும். அத்துடன் சிம்புவின் நடிப்பு வெளிப்படுவதற்கான தளத்தையும் இந்த கதைக்களம் வழங்கும் என்றார்.
வெற்றிமாறன் சிம்பு கூட்டணி படம் தொடர்பான அறிவிப்புகள் வெளிவராமல் இருந்த நிலையில் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளது என வெற்றிமாறன் பேசி இருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.