×

டாக்டர் படத்தின் ரிலீஸ் அப்டேட் கொடுத்துள்ள சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் டாக்டர், ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் என இரு படங்களில் பணியாற்றி வருகிறார். சிவகார்த்திகேயனும் தன்னுடைய SK புரொடக்ஷன்ஸ் சார்பில் படங்கள் தயாரித்து வருகிறார். எனவே நேற்று நடந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வாக்களித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் டாக்டர் படத்தின் அப்டேட் பற்றி பேசியுள்ளார். “டாக்டர் படத்தில் ஒரு பாடல் மட்டுமே மீதமுள்ளது. அதன் பிறகு ‘டாக்டர்’ படப்பிடிப்பு முடிந்துவிடும். அரசாங்கம் பரிந்துரைத்த அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு
 

சிவகார்த்திகேயன் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் டாக்டர், ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் என இரு படங்களில் பணியாற்றி வருகிறார்.

சிவகார்த்திகேயனும் தன்னுடைய SK புரொடக்ஷன்ஸ் சார்பில் படங்கள் தயாரித்து வருகிறார். எனவே நேற்று நடந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வாக்களித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் டாக்டர் படத்தின் அப்டேட் பற்றி பேசியுள்ளார்.

“டாக்டர் படத்தில் ஒரு பாடல் மட்டுமே மீதமுள்ளது. அதன் பிறகு ‘டாக்டர்’ படப்பிடிப்பு முடிந்துவிடும். அரசாங்கம் பரிந்துரைத்த அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு தான் படப்பிடிப்பு நடந்ததாக” சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

டாக்டர் படம் ஓடிடி-யில் வெளியாகுமா என்று கேட்டதற்கு அது தயாரிப்பாளர் தரப்பினரின் முடிவு என்று தெரிவித்தார். எனவே டாக்டர் படம் தியேட்டர்களில் தான் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

படத்தை 2021 கோடையில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகின்றனர். இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸுடன் இணைந்து எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.