×

தியேட்டர்களும் வாழும், ஓடிடி-யால் சிறிய படங்களும் மீளும்… இயக்குனர் சீனு ராமசாமி கருத்து!

இயக்குனர் சீனு ராமசாமி தியேட்டர்களுக்கு வர முடியாத படங்கள் ஓடிடி தளங்கள் வாயிலாக மீண்டு வரும் என்று தெரிவித்துள்ளார். ஊரடங்கால் தியேட்டர்கள் பல மாதங்களாக இயங்காமல் இருக்கின்றன. இதனால் கோடிக்கணக்கில் பணத்தைப் போட்டு படம் எடுத்த தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை எப்படி வியாபாரம் செய்வது என்று திணறி வருகின்றனர். இதைப் பயன்படுத்தி ஓடிடி தளங்கள் அசுர வேகத்தில் வளர்ந்து வருகின்றன. தயாரிப்பாளர்களும் தங்கள் படங்களை ஓடிடி-யில் விற்க முன்வந்துள்ளனர். சூர்யாவின் சூரரைப் போற்று ஓடிடி-யில் வெளியாவதாக வந்த
 

இயக்குனர் சீனு ராமசாமி தியேட்டர்களுக்கு வர முடியாத படங்கள் ஓடிடி தளங்கள் வாயிலாக மீண்டு வரும்  என்று தெரிவித்துள்ளார்.

ஊரடங்கால் தியேட்டர்கள் பல மாதங்களாக இயங்காமல் இருக்கின்றன. இதனால் கோடிக்கணக்கில் பணத்தைப் போட்டு படம் எடுத்த தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை எப்படி வியாபாரம் செய்வது என்று திணறி வருகின்றனர். இதைப் பயன்படுத்தி ஓடிடி தளங்கள் அசுர வேகத்தில் வளர்ந்து வருகின்றன. தயாரிப்பாளர்களும் தங்கள் படங்களை ஓடிடி-யில் விற்க முன்வந்துள்ளனர்.

சூர்யாவின் சூரரைப் போற்று ஓடிடி-யில் வெளியாவதாக வந்த அறிவிப்பு கோலிவுட்டில் அதிர்வலையை ஏற்படுத்தியது. தற்போது பல முன்னணி ஹீரோக்களின் படங்களும் ஓடிடி-களில் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இது தற்போது திரையரங்குகளின் எதிர்காலம் குறித்த  பெரும் விவாதத்தைத் தொடங்கியுள்ளது. சினிமாவை நன்கு அறிந்தவர்கள் பலர் ஓடிடி-யின் வரவை பெரும்பாலும் ஆதரிக்கின்றனர். சிறிய படங்கள் தியேட்டர்களைப் பார்க்காமலேயே மறைந்து போய்விடுகின்றன. அந்த மாதிரி படங்களுக்கு ஓடிடி தளங்கள் வரப்பிரசாதமாக அமையும் என்று கூறப்படுகிறது.


தற்போது இயக்குனர் சீனு ராமசாமி இதுகுறித்த தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.  அதில்

“திரையரங்கம்
மக்கள் ஒன்றுகூடும் கொண்டாட்ட
உணர்வின் வெளிப்பாடு
விஞ்ஞான வளர்ச்சியில்
சினிமா கருப்பு வெள்ளை ஃபிலிமில் தொடங்கி டிஜிட்டல்
என எல்லாமே மாறிவிட்டது
ஆனால் திரையரங்க
அனுபவம் மாறவில்லை.
அகன்ற திரை வாழும்.
திரையரங்கம் சேரமுடியாத படைப்புகள் ஓடிடி தளத்தில் மீளும்” என்று தெரிவித்துள்ளார்.