×

ஐஸ்வர்யா லட்சுமியின் நல்ல மனசு அவரை இன்னும் உயரம் கொண்டு செல்லும்- சூரி

 

‘மாமன்’ படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி நடித்தது குறித்து நடிகர் சூரி நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி, ராஜ்கிரண், ஸ்வாசிகா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மாமன்’. இப்படம் தமிழகத்தில் 30 கோடி ரூபாய் வசூலைக் கடந்து பெரும் வரவேற்பு பெற்றிருக்கிறது. ‘மாமன்’ படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி உடன் நடித்தது குறித்து சூரி நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.


அதில், “ஐஸ்வர்யா லட்சுமி இந்த படத்துக்கு பெரிய ஆதரவாக இருந்தார். உண்மையில் டாக்டரா இருப்பதால, திரையில் டாக்டர் கதாபாத்திரத்தை நம்பிக்கையுடனும், இயல்பான முறையிலும் சிறப்பாக செய்திருக்கிறார். படத்தில முக்கியமான சில காட்சிகளை முழுக்க அவர் தாங்கி சென்றார். அவருடைய நேர்மை மற்றும் நல்ல மனசு அவரை இன்னும் உயரம் நோக்கி கொண்டு செல்லும். படத்தைப் பிரமோட் செய்யவும், முழு முயற்சியுடன் ஈடுபட்டதுக்கும் ஐஸ்வர்யா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.