×

தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகிறார் சுரேஷ் ரெய்னா

 

தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகிறார் சுரேஷ் ரெய்னா.

தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமாகிறார் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா. DREAM KNIGHT STORIES தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்க விழாவில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியானது. லோகன் என்பவர் இயக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். நாளை ஒரு சர்ப்பரைஸ் சொல்கிறேன், காத்திருங்கள் என சமூக வலைதள பக்கத்தில் சுரேஷ் ரெய்னா கூறியிருந்த நிலையில், இன்று இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த  இந்தியத் துடுப்பாட்டக்காரரான சுரேஷ் ரெய்னா, 2005 முதல்  இந்திய அணியின் சிறந்த நடுவரிசை பேட்ஸ்மேனாக பணியாற்றிய இவரை மிஸ்டர் ஐபிஎல் என்றும் அழைப்பதுண்டு.