×

வாரணம் ஆயிரம் கெட்டப்பில் சூர்யா… வைரலாகும் ‘நவரசா’ படப்பிடிப்பு புகைப்படம்!

கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. நெட்ஃபிளிக்ஸ் ஸ்ட்ரீமிங் தளத்திற்காக மணிரத்னம் தயாரிப்பில் உருவாகிவரும் ‘நவரசா’ அந்தாலஜி படத்தின் இயக்குனர்கள் நடிகர்கள் உள்ளிட்டோர்களின் பட்டியல் சமீபத்தில் வெளியானது. அதில் கேவி ஆனந்த், கவுதம் வாசுதேவ் மேனன், பிஜாய் நம்பியார், கார்த்திக் சுப்பராஜ், பொன்ராம், கார்த்திக் நரேன், ரதிந்திரன் பிரசாத், அரவிந்த்சாமி ஆகிய 9 முன்னணி இயக்குனர்கள் இணைந்துள்ளனர். சூர்யா நடிப்பில் உருவான சூரரைப் போற்று படம் சமீபத்தில்
 

கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

நெட்ஃபிளிக்ஸ் ஸ்ட்ரீமிங் தளத்திற்காக மணிரத்னம் தயாரிப்பில் உருவாகிவரும் ‘நவரசா’ அந்தாலஜி படத்தின் இயக்குனர்கள் நடிகர்கள் உள்ளிட்டோர்களின் பட்டியல் சமீபத்தில் வெளியானது.

அதில் கேவி ஆனந்த், கவுதம் வாசுதேவ் மேனன், பிஜாய் நம்பியார், கார்த்திக் சுப்பராஜ், பொன்ராம், கார்த்திக் நரேன், ரதிந்திரன் பிரசாத், அரவிந்த்சாமி ஆகிய 9 முன்னணி இயக்குனர்கள் இணைந்துள்ளனர்.

சூர்யா நடிப்பில் உருவான சூரரைப் போற்று படம் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

அதையடுத்து தற்போது கவுதம் வாசுதேவ் இயக்கத்தில் சூர்யா இன்று இணைந்துள்ளார். இந்தப் பகுதியில் பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுகிறார்.

தற்போது கவுதம் மேனன் – சூர்யா கூட்டணியின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. தற்போது ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. சூர்யா பார்ப்பதற்கு வாரணம் ஆயிரம் கெட்டப்பில் காணப்படுகிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதற்கு முன் கவுதம் மேனன்- சூர்யா கூட்டணியில் வெளியான காக்க காக்க, வாரணம் ஆயிரம் ஆகிய படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. எனவே இந்த முறையும் இந்தக் கூட்டணி இணையும் படத்திற்கும் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.