×

சூர்யாவின் புதிய படத்தில் பிக்பாஸ் ‘ரம்யா பண்டியன்’ குவியும் வாழ்த்துகள் !

சூர்யா தயாரிக்கும் புதிய படத்தில் பிக்பாஸ் பிரபலம் ரம்யா பாண்டியன் நடிக்கவுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 கலந்துகொண்டு பிரபலமான ரம்யா பாண்டியன். இந்த நிகழ்ச்சியில் கடைசி நாள் வரை இருந்து கிராண்ட் பினாலேக்கு தேர்வான 5 பேரில் ஒருவர் இவர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கென்று ஒரு கூட்டமே இருந்தாலும், பல்வேறு விமர்சனங்களும் வைக்கப்பட்டன. அதையெல்லாம் கடந்து ரசிகர்களின் அமோக ஆதரவில் புகழ்பெற்றார் ரம்யா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்
 

சூர்யா தயாரிக்கும் புதிய படத்தில் பிக்பாஸ் பிரபலம் ரம்யா பாண்டியன் நடிக்கவுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 கலந்துகொண்டு பிரபலமான ரம்யா பாண்டியன். இந்த நிகழ்ச்சியில் கடைசி நாள் வரை இருந்து கிராண்ட் பினாலேக்கு தேர்வான 5 பேரில் ஒருவர் இவர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கென்று ஒரு கூட்டமே இருந்தாலும், பல்வேறு விமர்சனங்களும் வைக்கப்பட்டன. அதையெல்லாம் கடந்து ரசிகர்களின் அமோக ஆதரவில் புகழ்பெற்றார் ரம்யா.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு பல தமிழ் படங்களில் நடித்துள்ளார் ரம்யா பாண்டியன். டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை போன்ற படங்கள் இவர் நடிப்பில் வெளி வந்துள்ளன. படங்களில் நடித்து புகழ்பெறாத ரம்யா, பிக்பாஸ் மூலம் ரசிகர்களிடையே பரிச்சயம் ஆனார்.

இந்நிலையில் சூர்யாவின் 2D நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் ரம்யா பாண்டியன். இந்த தகவலை ரம்யா பாண்டியன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த படத்தை அறிமுக இயக்குனர் அரிசில் மூர்த்தி இயக்குகிறார். படத்தின் முதற்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த படம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்ப வெளியாகும் என தெரிகிறது.