×

"யாராவது என்னை காப்பாற்றுங்கள்...என் சொந்த வீட்டிலேயே என்னை துன்புறுத்துகிறார்கள்”- நடிகை கண்ணீர்

 

 

"யாராவது என்னை காப்பாற்றுங்கள்...என் சொந்த வீட்டிலேயே என்னை துன்புறுத்துகிறார்கள்” என தீராத விளையாட்டு பிள்ளை பட நடிகை தனுஸ்ரீ தத்தா கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார்.

ஹிந்தி பிரபல நடிகை தனுஸ்ரீ தத்தா தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் விஷால் ஜோடியாக நடித்து இருந்தார். இவர் தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சொந்த வீட்டிலேயே துன்புறுத்தப்படுவதாகவும், காவல்துறைக்கு செல்போன் மூலம் புகார் அளித்த போது நேரில் வந்து புகார் அளிக்குமாறு கூறியதாகவும் வேதனையுடன் கூறியுள்ளார். தனக்கு யாராவது உதவி செய்யும்படியும் தனுஸ்ரீ தத்தா கேட்டுக்கொண்டுள்ளார். 2018-ல் MeToo புகார் கொடுத்ததில் இருந்து வீட்டிற்கு மேலே, கதவிற்கு வெளியே அடிக்கடி சத்தம் எழுப்பி தனது நிம்மதியை கெடுக்கின்றனர் என்றும் நடிகை தனுஸ்ரீ தத்தா கண்ணீருடன் கூறியுள்ளார்.

தனுஸ்ரீ தத்தா ஹிந்தி நடிகர் நானா படேகர் 2018 மீது மீட் டூ கூறி இருந்தார். அன்றிலிருந்து அவர் வீட்டுக்கு அருகில் உள்ளவர்கள் அவரை கொடுமை படுத்துகிறார்கள்.