×

யார் இந்த அபர்ணா தாஸ் ? வெளியானது புதிய தகவல்…

தளபதி 65வது படத்தில் இணைந்துள்ளள அபர்ணா தாஸ் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. விஜய் – நெல்சன் கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அனிரூத் இசையில் உருவாகும் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணியாற்ற இருக்கிறார். அன்பறிவ் சகோதரர்களும் இந்த படத்தில் இணைந்துள்ளனர். இந்நிலையில் ‘தளபதி 65’ படத்தின் பூஜை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சென்னை சன் ஸ்டுடியோவில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த
 

தளபதி 65வது படத்தில் இணைந்துள்ளள அபர்ணா தாஸ் யார் என்ற‌ தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் – நெல்சன் கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அனிரூத் இசையில் உருவாகும் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணியாற்ற இருக்கிறார். அன்பறிவ் சகோதரர்களும் இந்த படத்தில் இணைந்துள்ளனர்.

இந்நிலையில் ‘தளபதி 65’ படத்தின் பூஜை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சென்னை சன் ஸ்டுடியோவில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த நிகழ்சியில் நடிகர் விஜய், இயக்குனர் நெல்சன், பிக்பாஸ் கவின், நடிகை அபர்ணா தாஸ் உள்ளிட்ட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கலந்துக்கொண்டனர். இந்நிலையில் விஜய் படத்தின் பூஜையில் தான் கலந்துக்கொண்டது மிக்க மகிழ்ச்சி என்று கூறிய அவர், படத்தில் நானும் ஒரு பாகமாக இருக்கப்போகிறேன். உலகின் வாழ்த்துக்கள் அனைத்தும் எனக்கு கிடைக்கட்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து ‘தளபதி 65’ படத்தில் நடிக்கவிருக்கும் அபர்ணா தாஸ் யார் என்ற கேள்வி எழுந்தது. இதையடுத்து இவரை பற்றிய தகவல் கிடைத்துள்ளது. கேரளா மாநிலத்தை சேர்ந்த எம்பிஏ பட்டம் படித்தவர் அபர்ணா தாஸ். மார்க்கெட்டிங் துறையில் மிகுந்த அனுபவம் வாய்ந்த இவர் மஸ்கட்டில் பணிபுரிந்து வந்தார். அதேநேரம் டிக்டாக்கிலும் வீடியோக்களை அடிக்கடி பதிவிட்டு வந்தார். இந்த வீடியோக்கள் மூலம் ரசிகர்களிடையே பிரபலமடைந்து வந்தார். இவரது டிக்டாக் வீடியோக்களால் மனம் கவர்ந்தவர் இயக்குனர் சத்யன், ‘அந்திக்காடு’ என்ற புதிய படத்தில் சிறிய கேரக்டர் ஒன்றில் நடிக்க வைத்தார். அதன்பிறகு ‘மனோகரம்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். ரசிகர்களின் ஆதரவால் தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து வருகிறார். தற்போது விஜய் படத்தில் நடிக்கவிருப்பதால் இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.