×

விஷாலுக்கு வில்லனாக ஆர்யா நடிக்கும் படத்தின் தலைப்பு வெளியானது!

விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கும் படத்தின் தலைப்பு வெளியானது. அரிமா நம்பி, இருமுகன், நோட்டா ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கின்றனர். இந்தப் படத்தில் விஷால் ஹீரோவாகவும் ஆர்யா வில்லனாகவும் நடிக்கிறார்கள். டப்மாஷ் புகழ் மிருணாளினி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப்படத்தை வினோத் என்பவர் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதத்தின் நடுவில் தொடங்கியது. தற்போது இந்தப்
 

விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கும் படத்தின் தலைப்பு வெளியானது.

அரிமா நம்பி, இருமுகன், நோட்டா ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கின்றனர். இந்தப் படத்தில் விஷால் ஹீரோவாகவும் ஆர்யா வில்லனாகவும் நடிக்கிறார்கள்.

டப்மாஷ் புகழ் மிருணாளினி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப்படத்தை வினோத் என்பவர் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதத்தின் நடுவில் தொடங்கியது.

தற்போது இந்தப் படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகியுள்ளது. விஷால்-ஆர்யா காம்போவில் உருவாகும் இப்படத்திற்கு ‘எனிமி(Enemy)’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த போஸ்டரை வெளியிட்ட விஷால் “இது இறுதியானது. எனது சிறந்த நண்பர் ஆர்யா இப்போது எனது “எதிரி”. காவியப் போரில் அவரை எதிர்த்துப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை. இது நன்றாக இருக்கப் போகிறது.” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் ‘துப்பறிவாளன் 2’ படத்திற்கான வேலைகளையும் மும்மரமாக செய்து வருகிறார் விஷால்!