ஜெய் நடிப்பில் உருவான ‘சட்டென்று மாறுது வானிலை’ ட்ரைலர் வெளியீடு..!
ஏ.ஆர். முருகதாசிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர் பாபு விஜய். இவர் தற்போது ‘சட்டென்று மாறுது வானிலை’ படத்தின் மூலம் இயக்குநர், தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.இதில் நடிகர் ஜெய் நாயகனாகவும், நாயகியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார். இவர்களுடன் யோகிபாபு, கேஜிஎப் புகழ் கருடா ராம், ஶ்ரீமன், ஆதித்யா கதிர் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
படத்தின் தலைப்பே வித்தியாசமாக உள்ளதே என்று கேட்பவர்களுக்கு அண்மைய ஊடகப் பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார் பாபு விஜய்.
மழை, வெயில், குளிர் என வானிலை மாறிக்கொண்டே இருப்பதுபோல், படத்தின் கதாநாயகனின் வாழ்க்கையிலும் அடுத்தடுத்த கணம் மாறிக்கொண்டே இருக்குமாம். அதனால் இப்படியொரு தலைப்பு என்பதுதான் அவர் அளித்துள்ள விளக்கம்.
‘அலைபாயுதே’ படத்தின் பாணியில் காதலும், ‘திரிஷ்யம்’ பாணியில் திகிலும் கலந்ததாக இப்படம் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
“கூடுதலாக கொஞ்சம் நகைச்சுவையையும் சேர்த்திருக்கிறேன். எனது குருநாதர் முருகதாசின் படங்களில் சமூக விழிப்புணர்வு குறித்து நிச்சயம் பேசப்படும். என்னுடைய படத்திலும் அதுபோன்ற அம்சம் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் சற்று முன் வெளியானது