×

இன்று OTT-ல் வெளியான படங்கள்.. 

 

திரையரங்குகளில் அடிக்கடி புதிய திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டு வருகிறது. அவ்வாறு இருக்க சில திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகிறது. மற்ற சில திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக OTT -யில் வெளியாகிறது. அதன்படி, இன்று சில படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் ஜூலை 12 -ம் தேதி இந்தியன் 2 படம் வெளியானது. சுமார் 28 வருடங்களுக்கு பிறகு சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ளார். இந்த இந்தியன் 2 திரைப்படம் இன்று நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.  

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான மம்முட்டி நடிப்பில் கடந்த மே மாதம் 23-ம் தேதி வெளியான படம் டர்போ.இதில் மம்முட்டியுடன், சுனில், அஞ்சனா ஜெய பிரகாஷ், கபீர்,சித்திக், திலிஷ் போதன் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்தனர். இப்படம் சோனி லிவ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது.

இந்தியாவுக்காக பாராஒலிம்பிக்கில் முதல் முதலில் தங்கப்பதக்கம் வென்ற முரளிகாந்த் பெட்காவின் வாழ்க்கை வரலாறு கதையை சந்து சாம்பியன் என்ற பெயரில் பாலிவுட்டில் திரைப்படமாக உருவானது. இன்று இப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ளது. 

டிரீம் ஹவுஸ் நிறுவனம் தயாரித்த 7 ஜி என்ற ஹாரர் படத்தை என் ஹாரூன் இயக்கி உள்ளார்.  இந்த படத்தில் சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட், ஆகியோர் நடித்துள்ளனர். கடந்த மாதம் ஜுலை 5-ந் தேதி இந்த படம் வெளியானது. இது ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இன்று இப்படம் ஆஹா தமிழ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி உள்ளது.