×

பிரபாஸுக்கு வில்லியாகிறாரா த்ரிஷா?

 

தெலுங்கு இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா, இந்தியில் இயக்கிய ‘அனிமல்’ படத்தை அடுத்து பிரபாஸ் நடிக்கும் ‘ஸ்பிரிட்' படத்தை இயக்குகிறார். இதில் கியாரா அத்வானி நாயகியாகவும் தென் கொரிய நடிகர், மா டாங்க் சியோக் வில்லனாகவும் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இப்போது, இதில் த்ரிஷா இணைந்துள்ளார் என்கிறார்கள். அவர் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ‘பவுர்ணமி’, ‘வர்ஷம்’ என சில தெலுங்கு படங்களில் பிரபாஸுடன் த்ரிஷா ஏற்கெனவே நடித்துள்ளார்.