×

மகிழ் திருமேனி படத்தின் படபிடிப்பில் இணைந்த உதயநிதி ஸ்டாலின்!

இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தின் படப்பிடிப்பில் உதயநிதி ஸ்டாலின் இணைந்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் கடைசியாக மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘சைக்கோ’ படத்தில் நடித்திருந்தார். அப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது உதயநிதி வரும் தமிழக தேர்தலுக்காக தனது காட்சி சார்பில் ஒட்டு சேகரித்து வருகிறார். ‘தடம்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு மகிழ் திருமேனி பல முன்னணி நடிகர்களுடன் இணைய இருப்பதாக செய்திகள் வெளியானது. விஜயுடன் கூட்டணி அமைக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால்
 

இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தின் படப்பிடிப்பில் உதயநிதி ஸ்டாலின் இணைந்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் கடைசியாக மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘சைக்கோ’ படத்தில் நடித்திருந்தார். அப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது உதயநிதி வரும் தமிழக தேர்தலுக்காக தனது காட்சி சார்பில் ஒட்டு சேகரித்து வருகிறார்.

‘தடம்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு மகிழ் திருமேனி பல முன்னணி நடிகர்களுடன் இணைய இருப்பதாக செய்திகள் வெளியானது. விஜயுடன் கூட்டணி அமைக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

ஆனால் மகிழ் திருமேனி உதயநிதியுடன் கூட்டணி அமைத்தார். இப்படத்தில் நடிகை நிதி அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சில நாட்களுக்கு முன்பு இப்படம் பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டது.

சமீபத்திய தகவல்களின் படி, உதயநிதி மகிழ் திருமேனி படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. படம் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜேர்னரில் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

.