×

ஆர்டிகிள் 15 தமிழ் ரீமேக்கில் நடிக்கும் உதயநிதி… இயக்குனர் யார் தெரியுமா!?

2019-ம் ஆண்டு அனுபவ் சின்ஹா இயக்கத்தில் பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான ‘ஆர்டிகிள் 15’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைத்தொடர்ந்து இந்தப் படத்தின் ரீமேக் உரிமைகளைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. இந்தப் படத்தின் தென்னிந்திய மொழிகளின் ரீமேக் உரிமைகளை போனி கபூர் கைப்பற்றியுள்ளார். முதலில் இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில் அஜித் நடிப்பதாக பேசப்பட்டு வந்தது. தற்போது ஆர்டிகிள் 15 படத்தின் தமிழ் ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க இருப்பதாக அதிகாரபூர்வ
 

2019-ம் ஆண்டு அனுபவ் சின்ஹா இயக்கத்தில் பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான ‘ஆர்டிகிள் 15’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைத்தொடர்ந்து இந்தப் படத்தின் ரீமேக் உரிமைகளைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. இந்தப் படத்தின் தென்னிந்திய மொழிகளின் ரீமேக் உரிமைகளை போனி கபூர் கைப்பற்றியுள்ளார்.

முதலில் இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில் அஜித் நடிப்பதாக பேசப்பட்டு வந்தது. தற்போது ஆர்டிகிள் 15 படத்தின் தமிழ் ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க இருப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று (ஆகஸ்ட் 22) விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ‘ஆர்டிகிள் 15’ ரீமேக் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியது. இந்தப் படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கவுள்ளார்.
இந்தப் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் பற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.