கார்த்திக் ராஜா என் நெருங்கிய நண்பர்- வனிதா விஜயகுமார்
இளையராஜா பற்றி எல்லாத்தையும் சொன்னேனா அசிங்கமா போயிடும் என நடிகை வனிதா விஜயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை வனிதா விஜயகுமார், அந்தப் பையன் என்னிடம் வந்து, 'நீ என்னை லவ் பண்றியா இல்லை என் அப்பாவை லவ் பண்றியானு கேட்டான். நான் உடனே, 'உன் அப்பாவைத்தான் லவ் பண்றேன் என சொன்னேன் என்றார். இதுதொடர்பாக நான் தெளிவுப்படுத்துகிறேன். கார்த்திக் ராஜா என்னுடைய நல்ல நண்பர். அவரது மனைவியும் எனக்கு நண்பர்தான். தயவு செய்து இந்த விஷயத்தில் கார்த்திக்கின் பெயரை கொண்டு வர வேண்டாம். இளையராஜா எனக்கு கடவுள் மாதிரி. அவர்களது உறவினர் போல்தான் அந்தக் குடும்பம் என்னை நடத்துகிறது. சட்டப்பூர்வமாக சந்திப்பேன்.
இளையராஜா வேணும்னே என் மேல கேஸ் போட்டு இருக்காரு, பவதாரணியும் நானும் அவ்வளவு ஒற்றுமையாய் இருந்தோம். என்னை பார்க்கும்போதெல்லாம் பவதாரணி நமக்குள் விட்ட குறை தொட்ட குறை இருக்குது என்று சொல்லுவா. இப்போ என் மேல கேஸ் போட்டு இருக்காருன்னா அவரோட சொந்த பொண்ணு பவதாரணிக்கும் இதே நிலைமை தானா? நான் இதற்கு மேல பேசினா பல விஷயத்தை சொல்லிடுவேன், அது அசிங்கமா போய்விடும்” என்றார்.