×

விஜய் தேவரகொண்டாவின் 'VD 12' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

 

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் விஜய் தேவரகொண்டா. இவர் அர்ஜுன் ரெட்டி திரைப்படம் மூலம் அறிமுகமானார். இவர் நடிப்பில் கடைசியாக ஃபேமிலி ஸ்டார் வெளியானது. இந்நிலையில், இயக்குநர் கௌதம் தின்னனுரி இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படத்திற்கு தற்போது ' VD 12' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கிறது. இப்படத்தை சித்தாரா என்டர்டெயின்மெண்ட் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 28ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் இம்மாதம் வெளியாகும் எனவும் அறிவித்துள்ளது.