×

விஜய் – நெல்சன் கூட்டணி படத்தின் அடுத்த ஷூட்டிங் எப்போது ?.. புதிய அப்டேட்…

‘விஜய் 65’ படத்தின் ஷூட்டிங் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் – நெல்சன் கூட்டணியில் உருவாகும் படத்தின் பணிகள் விறுவிறுப்படைந்துள்ளது. விஜய்யின் 65வது படமாக உருவாகும் இப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ரசிகர்களிடையே பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது. விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர்களுடன் யோகிபாபு, அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். முதற்கட்ட ஷூட்டிங் கடந்த 9ம் தேதி ஜார்ஜியாவில்
 

‘விஜய் 65’ படத்தின் ஷூட்டிங் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் – நெல்சன் கூட்டணியில் உருவாகும் படத்தின் பணிகள் விறுவிறுப்படைந்துள்ளது. விஜய்யின் 65வது படமாக உருவாகும் இப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ரசிகர்களிடையே பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது. விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர்களுடன் யோகிபாபு, அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

முதற்கட்ட ஷூட்டிங் கடந்த 9ம் தேதி ஜார்ஜியாவில் தொடங்கியது. 16 நாட்கள் நடைபெற்ற ஷூட்டிங்கில் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. அதோடு ஒரு சண்டைக்காட்சியும் படமாக்கப்பட்டது. சுமார் 100பேர் வரை இந்த ஷூட்டிங்கில் கலந்துக்கொண்டனர். ஷூட்டிங்கில் கலந்துக்கொண்டவர்களில் சிலருக்கு கொரானா தொற்று ஏற்பட்டது. இதனால் ஷூட்டிங்கை விரைவாக முடித்துக்கொண்டு விஜய் மற்றும் படக்குழுவினர் சென்னை திரும்பினார்.

இந்த ஷூட்டிங்கில் பங்கேற்று மும்பை திரும்பிய பூஜா ஹெக்டேவுக்கும் கொரானா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து வீட்டில் சிகிச்சை பெற்று தனிமையில் இருந்து வருகிறார். இந்நிலையில் அடுத்தக்கட்ட ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வந்தது. அதன்படி சென்னையில் விரைவில் ஷூட்டிங் தொடங்க உள்ளது. அதற்காக ஷாப்பிங் மால் போன்ற பிரம்மாண்ட செட் ஒன்று போடப்பட்டு வருகிறது. இந்த செட் ரெடியானதும் உடனடியாக ஷூட்டிங் தொடங்கும் என கூறப்படுகிறது.