×

“மணிமகுடமாக ‘லாபம்’ படம் இருக்கும்” மறைந்த இயக்குனருக்கு புகழாரம் சூட்டிய படக்குழு …

இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனுக்கு மணிமகுடமாக ‘லாபம்’ படம் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை என்று படத்தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. விஜய் சேதுபதி – எஸ்.பி.ஜனநாதன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘லாபம்’. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். இதில் ஜெகபதிபாபு, கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். டி இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இதையடுத்து கடந்த மாதம் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள்
 

இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனுக்கு மணிமகுடமாக ‘லாபம்’ படம் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை என்று படத்தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

விஜய் சேதுபதி – எஸ்.பி.ஜனநாதன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘லாபம்’. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். இதில் ஜெகபதிபாபு, கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். டி இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இதையடுத்து கடந்த மாதம் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வந்தது. தொடர்ந்து படத்தின் எடிட் பணிகளை கவனித்து வந்தபோது இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

இந்நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில்,இந்தத் தருணத்தில் எங்கள் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் மறைவு மிகுந்த வருத்தமும், வேதனையும் அளிக்கிறது.அதேசமயம், எங்கள் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் ‘லாபம்’ படத்தின் அனைத்துப் பணிகளையும் முழுமையாக முடித்துக் கொடுத்துவிட்டார். எஞ்சியிருக்கும் சில பணிகளை எங்கள் படக்குழுவினரே முடித்து வெளியுடவுள்ளோம்.

அனைத்து பணிகளையும் முடித்து ஏற்கெனவே திட்டமிட்டபடி வருகிற ஏப்ரல் மாதம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.எங்கள் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனுக்கு மணிமகுடமாகவும், அவரின் ரசிகர்களுக்கான திரைப்படமாக ‘லாபம்’ இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.