மனைவியின் காலை பிடித்துவிடுபவனே ஆண்மையுடைய ஆண்- தொகுப்பாளினி டிடி சர்ச்சை கருத்து
மனைவியின் Handbag-ஐ சுமந்து செல்பவன்தான் ஆண்மையுடைய ஆண் என விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினி டிடி கூறியுள்ளார்.
விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினி யாரென்றால் அனைவரும் கூறுவது டிடி தான். அதாவது திவ்யதர்ஷினியைத் தான். தமிழ் தொலைக்காட்சி தொகுப்பாளர்களில் பிரபலாமன
திவ்யதர்ஷினி, தொலைக்காட்சி மட்டுமில்லாமல் சர்வம் தாள மயம், சரோஜா, கோவா, பவர் பாண்டி உள்ளிட்ட படங்களிலும் நடித்துளளார். இளம் தொகுப்பாளினிகள் எவ்வளவோ பேர் வந்துவிட்ட போதிலும் டிடி-யின் இடத்தைப் பிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் தொகுப்பாளினி டிடி அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், “நான் வேலை முடித்து வீட்டிற்கு போகும்போது காலை பிடித்து விடும் நபராக ஆண்மகன் இருக்க வேண்டும். எனக்காக அவன் காபி போட்டு, நடந்து செல்லும்போது மனைவியின் கைகளை பிடித்துக்கொண்டு, Handbag-ஐ சுமந்து செல்பவன்தான் ஆண்மையுடைய ஆண்” எனக் கூறியுள்ளார்.