×

ஜூவாலா கட்டாவை கரம்பிடிக்கும் விஷ்ணு விஷால்… திருமண தேதி எப்போனு தெரியுமா ?

நடிகர் விஷ்ணு விஷால் – பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா திருமணம் நடைபெற உள்ளது. இதற்கான தேதியை அதிகாரப்பூர்வமாக விஷ்ணு விஷால் அறிவித்துள்ளார். தமிழில் வளர்ந்து வரும் நடிகராக உள்ள விஷ்ணு விஷால் ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன்பிறகு ‘குள்ளநரி கூட்டம்’, ‘முண்டாசுபட்டி’, ‘ஜீவா’, ‘மாவீரன் கிட்டு’ உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். அவர் நடிப்பில் வெளியான ‘ராட்சசன்’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தற்போது எப்.ஐ.ஆர் உள்ளிட்ட
 

நடிகர் விஷ்ணு விஷால் – பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா திருமணம் நடைபெற உள்ளது. இதற்கான தேதியை அதிகாரப்பூர்வமாக விஷ்ணு விஷால் அறிவித்துள்ளார்.

தமிழில் வளர்ந்து வரும் நடிகராக உள்ள விஷ்ணு விஷால் ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன்பிறகு ‘குள்ளநரி கூட்டம்’, ‘முண்டாசுபட்டி’, ‘ஜீவா’, ‘மாவீரன் கிட்டு’ உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். அவர் நடிப்பில் வெளியான ‘ராட்சசன்’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தற்போது எப்.ஐ.ஆர் உள்ளிட்ட சில படங்களை கைவசம் வைத்துள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ‘காடன்’

இதற்கிடையே பிரபல இந்திய பாட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவை, விஷ்ணு காதலித்து வருவதாக கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இவர்கள் இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இதை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில்கூட இருவரும் மாலதீவு சென்ற நெருக்கமான புகைப்படங்களை வெளியிட்டிருந்தனர்.

இதையடுத்து கடந்த மாதம் நடைபெற்ற ‘காடன்’ பட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய விஷ்ணு விஷால், தான் விரைவில் தெலுங்கு மாப்பிளை ஆகப் போகிறேன் என மீண்டும் உறுதிப்படுத்தியிருந்தார். இந்நிலையில் விஷ்ணு விஷால் தனது திருமணம் குறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். அதன்படி வரும் ஏப்ரல் 22ம் தேதி ஜுவாலா கட்டாவை, விஷ்ணு விஷால் முறைப்படி கரம்பிடிக்கிறார். இதற்கான அழைப்பிதழை தனது ட்விட்டர் பக்கத்தில் விஷ்ணு விஷால் வெளியிட்டுள்ளார். இந்த ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.