“22 ஆண்டுகளாக இதற்காகவே காத்திருந்தேன்..” கட்டி அணைத்த ரஜினிகாந்த் குறித்து விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி
Jun 16, 2025, 17:48 IST
'கண்ணப்பா' திரைப்படத்தை பார்த்துவிட்டு நடிகர் மோகன் பாபு மற்றும் விஷ்ணு மஞ்சுவை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டி வாழ்த்தினார்.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஷ்ணு மஞ்சு எழுத்து, தயாரிப்பு மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள பிரமாண்டமான படைப்பு ‘கண்ணப்பா’. இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு மிக்க படங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ள இப்படத்தில் மோகன்லால், பிரபாஸ், காஜல் அகர்வால், அக்சய் குமார், பிரீத்தி முகுந்தன், மோகன்பாபு, சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘கண்ணப்பா’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் ஒரு பான் இந்திய படமாக வரும் 27ம் தேதி வெளியாக உள்ளது. இதனையடுத்து பட புரோமோஷனில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.