படமாகிறது முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் வாழ்க்கை...
பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படுவது வழக்கமான ஒரு விஷயமாக உள்ளது. அதிலும் பாலிவுட் சினிமாவில் விளையாட்டு வீரர்களின் படங்கள் தொடர்ந்து படமாக்கப்பட்டு வருகிறது.அப்படி இப்போதும் ஒரு தகவல் வந்துள்ளது.இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கின் வாழ்க்கையை மையமாக வைத்து திரைப்படம் ஒன்று உருவாக உள்ளது. பூஷன் குமார் தயாரிக்கும் இந்த படத்தை பற்றிய அறிவிப்பு தான் சமூன வலைதளங்களில் வலம் வருகிறது. புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு அதனை எதிர்த்துப் போராடி தன்னை மீண்டும் களத்திற்கு கொண்டு வந்து சாதித்தவர் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங். யுவராஜ் சிங் ஒரு பேட்டியில், தனது வாழ்க்கை வரலாறு படமாக இருந்தால் சித்தாந்த் சதுர்வேதி தனது கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.தற்போது தயாரிப்பாளர் அறிவிப்பு மட்டுமே வந்துள்ளது, விரைவில் படத்தின் இயக்குனர், நடிகர், டைட்டில் குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.