×

இயக்குநர் மணிரத்னம் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

இயக்குநர் மணிரத்னத்தின் அலுவலகத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர் சென்னை: இயக்குநர் மணிரத்னத்தின் அலுவலகத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மல்டி ஸ்டாரர் படமான ‘செக்கச்சிவந்த வானம்’ திரைப்படம் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இயக்குநர் மணிரத்னம் நீண்ட இடைவெளிக்குப் பின் ஒரு பக்கா ஆக்ஷன் பேக் ஃபேமிலி டிராமா திரைப்படம் கொடுத்திருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், சென்னை அபிராமபுரத்தில் உள்ள
 

இயக்குநர் மணிரத்னத்தின் அலுவலகத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்

சென்னை: இயக்குநர் மணிரத்னத்தின் அலுவலகத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மல்டி ஸ்டாரர் படமான ‘செக்கச்சிவந்த வானம்’ திரைப்படம் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இயக்குநர் மணிரத்னம் நீண்ட இடைவெளிக்குப் பின் ஒரு பக்கா ஆக்‌ஷன் பேக் ஃபேமிலி டிராமா திரைப்படம் கொடுத்திருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை அபிராமபுரத்தில் உள்ள மணிரத்னத்தின் அலுவலகத்திற்கு தொலைப்பேசி மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

‘செக்கச்சிவ்ந்த வானம்’ படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்கக் கோரி இந்த கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

‘செக்கச்சிவந்த வானம்’ திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கும் சூழலில் இது போன்ற சம்பவம் நிகழ்ந்திருப்பது மணிரத்னம் ரசிகர்ளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.