×

இலவசங்கள் கண்டிப்பாக தேவை, ஓட்டுக்காக கொடுத்தால் அது தவறு : சர்காரை மறைமுக தாக்கும் ரஜினி

சர்கார் திரைப்படத்தில் இலவச பொருட்கள் வேண்டாம் என்று கூறியுள்ள நிலையில் இலவச பொருட்கள் அவசியம் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை : சர்கார் திரைப்படத்தில் இலவச பொருட்கள் வேண்டாம் என்று கூறியுள்ள நிலையில் இலவச பொருட்கள் அவசியம் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘சர்கார்’ திரைப்படம் கடும் சர்ச்சைகளைக் கடந்து தீபாவளிக்கு ரிலீசானது. இப்படத்தில் தமிழக அரசின் இலவச திட்டங்கள் குறித்து விமர்சிக்கப்பட்டிருப்பது உள்ளிட்ட விஷயங்களுக்கு
 

சர்கார் திரைப்படத்தில் இலவச பொருட்கள் வேண்டாம் என்று கூறியுள்ள நிலையில் இலவச பொருட்கள் அவசியம் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை : சர்கார் திரைப்படத்தில் இலவச பொருட்கள் வேண்டாம் என்று கூறியுள்ள நிலையில் இலவச பொருட்கள் அவசியம் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான  ‘சர்கார்’ திரைப்படம் கடும் சர்ச்சைகளைக் கடந்து தீபாவளிக்கு ரிலீசானது. இப்படத்தில்  தமிழக அரசின் இலவச திட்டங்கள் குறித்து விமர்சிக்கப்பட்டிருப்பது உள்ளிட்ட விஷயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக-வினர் போராட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து மறு தணிக்கை செய்யப்பட்ட இப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டது. 

இந்த நிலையில் சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினியிடம்  இதுகுறித்து  கேள்வி கேட்கப்பட்டபோது, ‘இலவசங்கள் கண்டிப்பாக தேவை. ஆனால் அதே நேரத்தில் தேவைப்படுபவர்களுக்கு தேவைப்படும்போது இலவசங்கள் கொடுக்க வேண்டும். ஆனால் ஓட்டுக்காக இலவசங்கள் கொடுத்தால் அது தவறு’ என்று கூறினார்.

முன்னதாக சர்கார் படத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்திய அதிமுகவினருக்கு எதிராக ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.