இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனாக மாறிய மாதவன்!
இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்று படத்துக்காக நடிகர் மாதவன் தனது லுக்கை மாற்றியுள்ளார்.
சென்னை: இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்று படத்துக்காக நடிகர் மாதவன் தனது லுக்கை மாற்றியுள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன், 1990-களில் ராக்கெட் தொழில்நுட்பம் குறித்த ரகசியங்களை பணம் பெற்றுக் கொண்டு வெளிநாடுகளுக்கு விற்றதாக குற்றம் சாட்டப்பட்டு, சிறை வாசம் அனுபவவித்தார். பொய்யான குற்றச்சாட்டினால் தண்டிக்கப்பட்ட நம்பி, சமீபத்தில் நிரபராதி என விடுவிக்கப்பட்டார்.
இவரது வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகும் ‘ராக்கெட்ரி-நம்பி விளைவு’ என்ற படத்தில் நம்பி நாராயணனாக மாதவன் நடிக்கிறார். இது தொடர்பான அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசரும் வெளியானது. இப்படம் தமிழ்,ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் உருவாகி வருகிறது.