×

எனக்கு எந்த பொஸசிவ்வும் இல்லை… நயன்தாரா குறித்து விக்னேஷ் சிவன் ஓபன் டாக்….

மற்ற நடிகர்களுடன் நயன்தாரா நடிக்கும்போது எந்த பொஸசிவ்வும் ஏற்பட்டதில்லை என விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி முக்கிய நட்சித்திரங்களாக ஜொலித்து வருகின்றனர். மற்றவர்களுக்கு முன்னூதாரணமாக இருக்கும் இந்த ஜோடி தங்களுக்குள் சில வரையறைகளை நிர்ணயித்து வாழ்ந்து வருகின்றனர். திரையுலகில் நயன்தாரா முன்னணி நடிகையாகவும், விக்னேஷ் சிவன் படங்களை இயக்கியும் வருகிறார். பிசியாக உள்ள இந்த ஜோடி ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி திரைப்படங்களை தயாரித்து வருகிறது.
 

மற்ற நடிகர்களுடன் நயன்தாரா நடிக்கும்போது எந்த பொஸசிவ்வும் ஏற்பட்டதில்லை என விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி முக்கிய நட்சித்திரங்களாக ஜொலித்து வருகின்றனர். மற்றவர்களுக்கு முன்னூதாரணமாக இருக்கும் இந்த ஜோடி தங்களுக்குள் சில வரையறைகளை நிர்ணயித்து வாழ்ந்து வருகின்றனர்.

திரையுலகில் நயன்தாரா முன்னணி நடிகையாகவும், விக்னேஷ் சிவன் படங்களை இயக்கியும் வருகிறார். பிசியாக உள்ள இந்த ஜோடி ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி திரைப்படங்களை தயாரித்து வருகிறது. இளம் இயக்குனர்களை ஊக்குவித்து வரும் இந்நிறுவனம், ‘ராக்கி’, ‘கூழாங்கல்’, நெற்றிக்கண்’ ஆகியப் படங்களை தயாரித்துள்ளது.

இதுமட்டுமல்லாமல் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனமும், செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவும் இணைந்து ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தை தயாரித்து வருகிறது. விஜய் சேதுபதி – நயன்தாரா இணைந்து நடிக்கும் இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார்.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் தனது இன்டாகிராம் பக்கத்தில் நயன்தாரா வேறொரு ஹீரோவுடன் நடிப்பது குறித்து தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அதில் என் தங்கம், நயன்தாரா வேறொரு நடிகருடன் முதன்முறையாக நடிக்கும்போது தனக்கு எந்த பொஸசிவ் பிரச்னையும் இல்லை. அதேபோன்று சமந்தா பற்றி குறிப்பிட்ட விக்னேஷ் சிவன், இந்த பார்ட்டியில் உங்களை வழி நடத்தியது நல்லதொரு விஷயம் என குறிப்பிட்டுள்ளார்.