×

‘என்.ஜி.கே’-வில் சூர்யா அரசியல் தலைவரா?

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘என்.ஜி.கே’ திரைப்படத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் கேரக்டர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சென்னை: இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘என்.ஜி.கே’ திரைப்படத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் கேரக்டர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் சூர்யா ‘என்.ஜி.கே’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் ‘என்.ஜி.கே’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர். இயக்குநர்
 

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘என்.ஜி.கே’ திரைப்படத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் கேரக்டர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘என்.ஜி.கே’ திரைப்படத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் கேரக்டர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் சூர்யா ‘என்.ஜி.கே’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் ‘என்.ஜி.கே’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர்.

இயக்குநர் செல்வராகவனுக்கு உடல்நலம் சரியில்லாததால் ‘என்.ஜி.கே’ ஷூட்டிங் தாமதமானது. தற்போது மீண்டும் ஷூட்டிங் தொடங்கப்பட்டு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இப்படம் குறித்த மாஸ் அப்டேட்டிற்காக சூர்யா ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், இப்படத்தில் நடிகர் சூர்யா அரசியல் தலைவராக நடித்து வருவதாக கூறப்படும் நிலையில், சமூக வலைத்தளங்களில் #MajesticPoliticianNGK என்ற ஹேஷ்டேக்கை சூர்யா ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் சில நிமிடங்களிலேயே இந்திய அளவிலான ட்விட்டர் ட்ரெண்டிங்கில் 3வது இடத்தை பிடித்துள்ளது. 

அரசியல் பேசும் இப்படத்தில் சூர்யாவை அரசியல் தலைவராக பார்க்க அவரது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர். விரைவில் இப்படம் குறித்த கூடுதல் தகவல் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.