×

என்ஜிகே சாதாரண அரசியல் திரில்லர் படமாக இருக்காது : சஸ்பென்ஸை உடைத்த சூர்யா!

என்ஜிகே சாதாரண அரசியல் திரில்லர் படமாக இருக்காது என்று படத்தின் சஸ்பென்ஸை நடிகர் சூர்யா மேடையில் கூறியுள்ளார். சென்னை: என்ஜிகே சாதாரண அரசியல் திரில்லர் படமாக இருக்காது என்று படத்தின் சஸ்பென்ஸை நடிகர் சூர்யா மேடையில் கூறியுள்ளார். இயக்குநர் செல்வராகவன் – சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் என்.ஜி.கே. எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர். இதில் சூர்யா அரசியல்வாதியாக நடித்திருக்கிறார். கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கிய
 

என்ஜிகே சாதாரண அரசியல் திரில்லர் படமாக இருக்காது என்று படத்தின் சஸ்பென்ஸை நடிகர் சூர்யா மேடையில் கூறியுள்ளார்.

சென்னை: என்ஜிகே சாதாரண அரசியல் திரில்லர் படமாக இருக்காது என்று படத்தின் சஸ்பென்ஸை நடிகர் சூர்யா மேடையில் கூறியுள்ளார். 

இயக்குநர் செல்வராகவன் – சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் என்.ஜி.கே. எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர். இதில் சூர்யா அரசியல்வாதியாக நடித்திருக்கிறார். 

கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கிய படம் 2018-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவரும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால், சில காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிப்போனது. பொதுவாக சூர்யா படம் என்றால் படப்பிடிப்பு ஆறு மாதத்தில் முடிந்துவிடும். ஆனால் இப்படம் சொன்ன தேதிக்கு முடிக்காததால், செல்வராகவன் மீது சூர்யா மிகுந்த மன வருத்தத்தில் இருந்ததாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டது. 

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் சூர்யா, செல்வராகவன், சாய் பல்லவி, யுவன் சங்கர் ராஜா, தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அதில் பேசிய சூர்யா, ‘அரசியல் ஒரு ரத்தம் சிந்தாத யுத்தம், யுத்தம் ஒரு ரத்தம் சிந்தும் அரசியல். என்ஜிகே ஒரு சாதாரண அரசியல் திரில்லர் படமாக இருக்காது.

நீண்ட இடைவேளைக்குப் பின் அரசியல் சார்ந்த திரைப்படத்தை இயக்குநர் செல்வராகவன் இயக்கியுள்ளார். ஒவ்வொரு நாள் படப்பிடிப்பிலும் புது படத்திற்கு செல்வது போல இருந்தது. நேற்று நடந்த படப்பிடிப்பின் தொடர்ச்சி மறுநாள் இருக்காது. செல்வராகவன் இயக்கத்திலும் சரி, டப்பிங்கிலும் நுணுக்கமாகப் பார்த்து பார்த்து செல்வார். அவருடைய இயக்கத்திலும், எழுத்திலும் எனக்கு தீராத காதல் உண்டு. செல்வாவின் இயக்கத்தில் ஆத்மார்த்தமாக நடித்திருக்கிறேன். நீண்ட காலமாக செல்வாவுடன் படம் பண்ண வேண்டும் என்று ஆசை ஆனால் தற்போது 17 ஆண்டுகளுக்குப் பிறகு எனது ஆசை நிறைவேறியுள்ளது. 

என்னுடைய துறையில் இப்படம் ஒரு முக்கியமான படமாக இருக்கும். இப்படத்தின் டப்பிங் பேசி முடித்துவிட்டேன். செல்வராகவன் அடுத்த படம் எடுத்தால் நானே கதாநாயகனாக நடிக்க விரும்புகிறேன்’ என்று கூறியுள்ளார்.