ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களை பாடிய ஏழை பெண்மணிக்கு கிடைத்த வாய்ப்பு: வைரலாகும் வீடியோ!
ஆந்திர மாநிலத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களை பாடி இணையத்தில் வைரலான ஏழைப் பாடகிக்கு, திரைப்படத்தில் பாட வாய்ப்பு கிடைத்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா: ஆந்திர மாநிலத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களை பாடி இணையத்தில் வைரலான ஏழைப் பாடகிக்கு, திரைப்படத்தில் பாட வாய்ப்பு கிடைத்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் வடிசலேறு பகுதியை சேர்ந்தவர் பேபி. இவர், அப்பகுதி மக்களிடையே கிராமிய பாடல்கள், சினிமா பாடல்களை பாடி வந்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளிவந்த பாடல்களை இவர் பாடியது அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த பாடல்களை அவர் பாடும் வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வைரலான நிலையில், அதனை பார்த்த தெலுங்கு திரைப்பட இசையமைப்பாளர் கோடேஸ்வர ராவ், பேபிக்கு திரைப்படத்தில் பாட வாய்ப்பு தந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பெண்மணிபாடும் வீடியோ பதிவை ஏ.ஆர்.ரஹ்மான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். திறமை எங்கு இருந்தாலும், அதற்கான வாய்ப்பு நிச்சயம் அமையும் என்பதற்கு இந்த பெண்மணியே ஒரு சான்றாகும்.