×

ஐரா படத்தின் போஸ்டர் வெளியீடு: இதுவரை பார்த்திடாத புதிய கோணத்தில் அசத்தும் நயன்தாரா!

நயன்தாரா நடிக்கும் ஐரா திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. சென்னை: நயன்தாரா நடிக்கும் ஐரா திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தொடர்ந்து தன்னுடைய தோற்ற பொலிவாலும், சீரிய நடிப்பு திறமையினாலும் வெற்றிப்படங்களை கொடுத்துவரும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முதன்முறையாக ஐரா என்ற படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளார். அறம்” படத்தை தயாரித்த கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் கொட்டபாடி ஜே ராஜேஷ் தயாரிக்கும் இப்படத்தை லட்சுமி, மா போன்ற குறும்படங்களை இயக்கிய
 

நயன்தாரா நடிக்கும் ஐரா திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

சென்னை: நயன்தாரா நடிக்கும் ஐரா திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து தன்னுடைய தோற்ற பொலிவாலும், சீரிய நடிப்பு திறமையினாலும் வெற்றிப்படங்களை கொடுத்துவரும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முதன்முறையாக ஐரா என்ற படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளார். 

அறம்” படத்தை தயாரித்த கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் கொட்டபாடி ஜே ராஜேஷ் தயாரிக்கும் இப்படத்தை லட்சுமி, மா போன்ற குறும்படங்களை இயக்கிய சர்ஜூன் கதை அமைத்து, வசனம் எழுதி  இயக்குகிறார். இப்படத்தில் நயன்தாராவுடன் கலை அரசன், யோகி பாபு, ஜே பி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இரட்டை வேடத்தில் நயன்தாரா நடிக்கும் முதல் படம் என்பதால், அவரின் ரசிகர்கள் மத்தியில் இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.