×

ஓமனை அடுத்து ஹனிமூனுக்கு சுவிட்சர்லாந்து செல்லும் பிரபல ஜோடி!

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா – நிக் ஜோனஸ் ஜோடி ஹனிமூனுக்கு சுவிட்சர்லாந்துக்கு செல்கிறது. மும்பை: பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா – நிக் ஜோனஸ் ஜோடி ஹனிமூனுக்கு சுவிட்சர்லாந்துக்கு செல்கிறது. முன்னாள் உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான பிரியங்கா சோப்ரா, தன்னைவிட 10 வயது குறைந்த காதலரான பிரபல அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனஸை திருமணம் செய்து கொண்டார். ஜோத்பூரில் உள்ள கலைநயமிக்க ’உமைத் பவன்’ அரண்மனையில் இந்து முறைப்படியும், கதோலிக்க கிறிஸ்துவ முறைப்படியும்
 

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா – நிக் ஜோனஸ் ஜோடி ஹனிமூனுக்கு சுவிட்சர்லாந்துக்கு செல்கிறது.

மும்பை: பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா – நிக் ஜோனஸ் ஜோடி ஹனிமூனுக்கு சுவிட்சர்லாந்துக்கு செல்கிறது.

முன்னாள் உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான பிரியங்கா சோப்ரா, தன்னைவிட 10 வயது குறைந்த காதலரான பிரபல அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனஸை திருமணம் செய்து கொண்டார். ஜோத்பூரில் உள்ள கலைநயமிக்க ’உமைத் பவன்’ அரண்மனையில் இந்து முறைப்படியும், கதோலிக்க கிறிஸ்துவ முறைப்படியும் ஆடம்பரமாக நடைபெற்றது. இதை தொடர்ந்து நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஏராளமான பாலிவுட் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் பிரமுகர்கள் வந்து மணமக்களை வாழ்த்தினர்.

திருமணம் முடிந்த கையோடு, பிரியங்கா சோப்ரா விளம்பர பட ஷூட்டிங்கிலும் சில டிவி நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பிலும் கலந்துகொண்டார். இதையடுத்து அவர் நடிக்கும் இந்தி படமான ‘த ஸ்கை இஸ் பிங்’ பெங்காலி படமான ‘நளினி’ ஆகியவற்றின் படப்பிடிப்பில் பங்கேற்க இருக்கிறார்.இதற்கிடையே இந்த ஜோடி,  ஹனிமூன் பயணமாக ஓமனுக்கு சென்று வந்தது. இங்கு சில நாட்கள் மட்டுமே தங்கிய அவர்கள்,  படப்பிடிப்பு வேலைகள் இருந்ததால் அவசர திரும்பினர்.

இந்நிலையில் அவர்கள் சுவிட்சர்லாந்துக்கு ஹனிமூன் செல்ல இருப்பதாக பிரியங்காவுக்கு நெருங்கியவர்கள் தெரிவித்துள்ளனர். வரும் 20ம் தேதி மும்பையில் திரைப்படத்துறையினருக்கு திருமண பார்ட்டி கொடுக்கிறார் பிரியங்கா. பின்னர் படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் அவர், 28 ஆம் தேதி ஹனிமூனுக்கு சுவிட்சர்லாந்து செல்கிறார். அங்குள்ள லேக் ஜெனிவா நகரில் பிரியங்கா-நிக்ஜோனஸ் ஜோடி புத்தாண்டை கொண்டாடுகிறது. ஒரு வாரத்துக்கு மேல் அங்கு தங்கும் அவர்கள் பின்னர் இந்தியா திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.