×

கமல் எப்படி இருக்கிறார் ? மகள்கள் வெளியிட்ட அறிக்கை…

நடிகர் கமல் நலமுடன் இருப்பதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என அவரது மகள்கள் தெரிவித்துள்ளனர். அரசியல் கட்சி தொடங்கிய நடிகர் கமல் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்தார். கடந்த ஒரு மாத காலமாக பல்வேறு இடங்களில் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்தார் கமல். கடந்த சில ஆண்டுக்கு முன்பு கமலுக்கு ஏற்பட்ட விபத்தில் காயம் ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதேபோன்று மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் மருத்துவர்களின் எச்சரிக்கையை மீறி பிரச்சாரங்களில் ஈடுபட்டு
 

நடிகர் கமல் நலமுடன் இருப்பதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என அவரது மகள்கள் தெரிவித்துள்ளனர்.

அரசியல் கட்சி தொடங்கிய நடிகர் கமல் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்தார். கடந்த ஒரு மாத காலமாக பல்வேறு இடங்களில் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்தார் கமல். கடந்த சில ஆண்டுக்கு முன்பு கமலுக்கு ஏற்பட்ட விபத்தில் காயம் ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அதேபோன்று மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் மருத்துவர்களின் எச்சரிக்கையை மீறி பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்தார்.

இதேபோன்று பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வந்தார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவு, பிரச்சாரத்தில் ‌சிறிது ஓய்வு கிடைத்ததை அடுத்து அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில் கமலின் மகள்களான ஸ்ருதிஹாசனும், அக்ஷரா ஹாசனும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர் . அதில் இன்று காலை தனியார் மருத்துவமனையில் அப்பாவுக்கு அறுவை சிகிச்சை முடிந்தது. அவர் நலமுடன் இருக்கிறார். விரைவில் வீடு திரும்புவார். பின்னர் அனைவரையும் சந்திப்பார் என்று கூறியுள்ளனர்.