×

கமல் சார் மீது எனக்கு க்ரஷ்: உலகநாயகனுக்கே குறும்படம் போட்ட ஓவியா!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் கொடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் ஓவியா. சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் ஓவியா. கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் முதல் சீசனில் மக்களால் அதிகம் நேசிக்கப்பட்ட ஓவியா, இரண்டாவது சீசனை தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து தற்போது 106வது நாளான கிராண்ட் ஃபினாலேவில் கலந்துக் கொண்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சிக் கொடுத்தார். மீண்டும் எண்ட்ரி கொடுத்த ஓவியாவுக்கு பிக் பாஸ்
 

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் கொடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் ஓவியா.

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் ஓவியா.

கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் முதல் சீசனில் மக்களால் அதிகம் நேசிக்கப்பட்ட ஓவியா, இரண்டாவது சீசனை தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து தற்போது 106வது நாளான கிராண்ட் ஃபினாலேவில் கலந்துக் கொண்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சிக் கொடுத்தார்.

மீண்டும் எண்ட்ரி கொடுத்த ஓவியாவுக்கு பிக் பாஸ் அரங்கம் அதிர அவரது ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். பின் கமல்ஹாசனுடன் சற்று உரையாடிய ஓவியாவிடம், ரசிகர்கள் சில கேள்விகளை எழுப்பினர். அதில் ஒருவர் ஓவியாவிடம், தமிழ் மக்களுக்காக என்ன செஞ்சிருக்கீங்க என்றார். அதற்கு பதிலளித்த ஓவியா, நான் பிசியாக படங்களில் நடிச்சிட்டு இருக்கேன், உங்கள எண்டர்டெய்ன் பண்ணனும். நிஜமா நான் ஏற்கனவே சொல்லிருக்கேன், எதாவது பண்ணுவேன்னு, அது கண்டிப்பா செய்வேன். இப்போதைக்கு நடிப்பு மட்டும் தான் என் கான்செண்ட்ரேஷன் என்றார்.

மேலும், மருத்துவ முத்த நிபுணர் ஆரவுடன் தனக்கு ஆரோக்கியமான உறவு இருப்பதாகவும் அவர் கூறினார். நீங்க இன்னும் கொஞ்ச நாள் பிக் பாஸ் வீட்டில் இருந்து டைட்டில் ஜெயிச்சிருக்கலாமே என்ற கேள்விக்கு, சிறு வயதிலிருந்தே எனக்கு ரேங்கிங் சிஸ்டம் பிடிக்காது. ஒரு அனுபவத்துக்காக தான் பிக் பாஸ் வீட்டிற்கு வந்தேன். நல்லதோ கெட்டதோ அனுபவத்தை கத்துக்கிட்டேன் என்றார்.

இதைத் தொடர்ந்து, கமல்ஹாசன் மீது தனக்கு க்ரஷ் இருப்பதாக கூறிய ஓவியா, அவருக்காக பிரத்யேகமாக ஒரு குறும்படத்தை போட்டுக் காட்டி அசத்தினார். பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி தொடங்கியது முதல், கடந்த 106 நாட்களில் நடந்த சில உணர்ச்சிபூர்வமான, சுவாரஸ்ய சம்பவங்கள் அந்த குறும்படத்தில் இடம்பெற்றிருந்தன.

பிக் பாஸ் 2 டைட்டில் வின்னருக்கும், அதில் பங்கேற்ற அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு ஓவியா வெளியேறினார்.