×

கமல்ஹாசன் வீட்டில் டும் டும் டும்..! காதலரை மணக்கிறார் ஸ்ருதிஹாசன்?

பிரபல நடிகை ஸ்ருதிஹாசனின் திருமணம் குறித்த வதந்திக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். சென்னை: பிரபல நடிகை ஸ்ருதிஹாசனின் திருமணம் குறித்த வதந்திக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளும், பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன், தமிழ் சினிமாவில் விஜய், அஜித், விஷால், சூர்யா உள்ளிட்ட முக்கிய நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். மேலும், சில பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து இசை நிகழ்ச்சிகளில்
 

பிரபல நடிகை ஸ்ருதிஹாசனின் திருமணம் குறித்த வதந்திக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

சென்னை: பிரபல நடிகை ஸ்ருதிஹாசனின் திருமணம் குறித்த வதந்திக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளும், பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன், தமிழ் சினிமாவில் விஜய், அஜித், விஷால், சூர்யா உள்ளிட்ட முக்கிய நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். மேலும், சில பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து இசை நிகழ்ச்சிகளில் ஆர்வம் காட்டி வரும் ஸ்ருதிஹாசன், ஐரோப்பாவைச் சேர்ந்த மைக்கேல் கோர்சல் என்பவரை காதலித்து வருகிறார். இந்த ஆண்டு ஸ்ருதிஹாசனுக்கும், மைக்கேல் கோர்சலுக்கும் திருமணம் நடைபெறும் என தகவல்கள் வெளியாகின.