×

சர்கார் சர்ச்சை: ஏ.ஆர். முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்: தமிழக அரசு வலியுறுத்தல்!

சர்கார் படத்தில் அரசு திட்டங்களை விமர்சித்ததற்காக இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. சென்னை: சர்கார் படத்தில் அரசு திட்டங்களை விமர்சித்ததற்காக இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான சர்க்கார் திரைப்படத்தில் தமிழக அரசையும், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச திட்டங்களையும் கடுமையாக விமர்சிக்கும் காட்சிகள் இருப்பதாகவும், அதை
 

சர்கார் படத்தில் அரசு திட்டங்களை விமர்சித்ததற்காக இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை: சர்கார் படத்தில் அரசு திட்டங்களை விமர்சித்ததற்காக இயக்குநர்  ஏ.ஆர். முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான சர்க்கார் திரைப்படத்தில் தமிழக அரசையும், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச திட்டங்களையும் கடுமையாக விமர்சிக்கும் காட்சிகள் இருப்பதாகவும், அதை நீக்கக் கோரி தமிழகத்தில் பல திரையரங்குகள் முன்பு அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.இந்த வழக்கில், தன்னைக் காவல்துறை எந்நேரமும் கைது செய்யக் கூடும் என்பதால் முன் ஜாமீன் கோரி நவம்பர் 9-ம் தேதி மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், நவம்பர் 27-ம் தேதி வரை ஏ.ஆர்.முருகாதாஸை கைது செய்யக் கூடாது என இடைக்கால உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சர்கார் படத்தில் அரசு திட்டங்களை விமர்சித்ததற்காக முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் அவர் எடுக்கும் படங்களில் அரசின் திட்டங்களையும், அரசையும் விமர்சிக்கும் வகையில் காட்சிகள் அமைக்கமாட்டேன் என்று உத்தரவாத பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதுதொடர்பாக, முருகாதாஸிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க வேண்டுமென அவரது வழக்கறிஞர் தெரிவித்ததையடுத்து வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.