×

சுசீந்திரனுடன் இணையும் ‘ஜெய்’ புதிய படத்தின் டைட்டிலும் வெளியீடு…

சுசீந்திரன் இயக்கும் புதிய படத்தில் நடிகர் ஜெய் நடிக்கிறார். வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 28 படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் ஜெய். இவர் படங்கள் சமீபகாலமாக வெளியாகாமல் இருந்து. ஆனால் தற்போது அடுத்தடுத்து நடிக்கும் படங்கள் வெளிவர ரெடியாகியுள்ளன. கடந்த ஆண்டு நடிகர் ஜெய் ட்ரிபிள்ஸ் என்ற வெப் சீரிஸ் ஒன்றில் நடித்துள்ளார். அந்த படம் தற்போது ஓடிடி வெளியாகி உள்ளது. இதேபோன்று வெங்கட் பிரபுவின் பார்ட்டி படத்திலும் நடித்துள்ளார் ஜெய். தொடர்ந்து எண்ணி
 

சுசீந்திரன் இயக்கும் புதிய படத்தில் நடிகர் ஜெய் நடிக்கிறார்.

வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 28 படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் ஜெய். இவர் படங்கள் சமீபகாலமாக வெளியாகாமல் இருந்து. ஆனால் தற்போது அடுத்தடுத்து நடிக்கும் படங்கள் வெளிவர ரெடியாகியுள்ளன.

கடந்த ஆண்டு நடிகர் ஜெய் ட்ரிபிள்ஸ் என்ற வெப் சீரிஸ் ஒன்றில் நடித்துள்ளார். அந்த படம் தற்போது ஓடிடி வெளியாகி உள்ளது. இதேபோன்று வெங்கட் பிரபுவின் பார்ட்டி படத்திலும் நடித்துள்ளார் ஜெய். தொடர்ந்து எண்ணி துணிக, பிரேக்கிங் நியூஸ் படங்களில் நடித்து வருகிறது.

இந்நிலையில் ஜெய் இரண்டு படங்களில் நடிக்கிறார். இந்த இரண்டு படங்களையும் சுசீந்திரன் இயக்குகிறார். ஒரு படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டதை எட்டியுள்ளது. குற்றம் குற்றமே என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ஜெய்-க்கு ஜோடியாக ஸ்ருதி வெங்கட் நடிக்கிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

இதேபோன்று ஜெய் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குகிறார். பெயரிடப்படாத இப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா முக்கிய ரோலில் நடிக்கிறார்.