×

ஜெயராம் மகனின் படம் ஸ்ரீதேவி மகனால் நிறுத்தப்பட்டது?

அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்க இருந்த தமிழ் படம் அர்ஜுன் கபூரால் நிறுத்தப்பட்டது. சென்னை: அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்க இருந்த தமிழ் படம் அர்ஜுன் கபூரால் நிறுத்தப்பட்டது. பிரேமம் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு காளிதாஸ் ஜெயராமை வைத்து தமிழில் படம் இயக்கவுள்ளதாக அல்போன்ஸ் புத்திரன் அறிவித்தார். இதுகுறித்து காளிதாஸ் ஜெயராம், அல்போன்ஸ் புத்திரன் படத்தில் நடிக்க இருக்கிறேன். இந்த கதைக்களம் மிக சுவாரஸ்யமானதாக இருக்கும் என பதிவு செய்திருந்தார்.
 

அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்க இருந்த தமிழ் படம் அர்ஜுன் கபூரால் நிறுத்தப்பட்டது.

சென்னை: அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்க இருந்த தமிழ் படம் அர்ஜுன் கபூரால் நிறுத்தப்பட்டது.

பிரேமம் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு காளிதாஸ் ஜெயராமை வைத்து தமிழில் படம் இயக்கவுள்ளதாக அல்போன்ஸ் புத்திரன் அறிவித்தார். இதுகுறித்து காளிதாஸ் ஜெயராம், அல்போன்ஸ் புத்திரன் படத்தில் நடிக்க இருக்கிறேன். இந்த கதைக்களம் மிக சுவாரஸ்யமானதாக இருக்கும் என பதிவு செய்திருந்தார். இந்நிலையில் அல்போன்ஸ் புத்திரன் இந்த ப்ராஜெக்டை கைவிட்டு விட்டார்.

பாலிவுட்டில் பிரபலமான நடிகர் அர்ஜுன் கபூர், இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு மகன் முறை வேண்டும். பிரேமம் படத்தை இந்தியில் அவரை வைத்து  இயக்க அல்போன்ஸ்க்கு வாய்ப்பு அமைந்திருப்பதாக கூறப்படுகிறது. அதனால் அல்போன்ஸ் புத்திரன், தமிழ் ப்ராஜெக்டை ஓரங்கட்டிவிட்டு இதை கையில் எடுத்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.