×

தமிழ் இசையை போற்றும் ஏ.ஆர்.ரகுமானின் புதிய இணையதளம் அறிமுகம்

தளபதி விஜய் நடித்த ‘சர்கார்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.ரகுமான் ஃபவுண்டேஷன் சார்பாக தமிழ் இசை குறித்த ஆராய்ச்சி இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டது. சென்னை: தளபதி விஜய் நடித்த ‘சர்கார்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.ரகுமான் ஃபவுண்டேஷன் சார்பாக தமிழ் இசை குறித்த ஆராய்ச்சி இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘சர்கார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா ரசிகர்களின் ஆரவாரத்துக்கு இடையே கோலாகலமாக நேற்று நடைபெற்றது. தமிழ் சினிமாவில்
 

தளபதி விஜய் நடித்த ‘சர்கார்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.ரகுமான் ஃபவுண்டேஷன் சார்பாக தமிழ் இசை குறித்த ஆராய்ச்சி இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டது.

சென்னை: தளபதி விஜய் நடித்த ‘சர்கார்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.ரகுமான் ஃபவுண்டேஷன் சார்பாக தமிழ் இசை குறித்த ஆராய்ச்சி இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘சர்கார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா ரசிகர்களின் ஆரவாரத்துக்கு இடையே கோலாகலமாக நேற்று நடைபெற்றது. தமிழ் சினிமாவில் முதன்முறையாக ரசிகர்கள் இணைந்து சர்கார் இசையை வெளியிட்டனர்.

இந்த இணையதளத்தை தளபதி விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் தொடங்கி வைத்தார். இந்த சர்கார் இசை நிகழ்ச்சி மேடையில் தனது அறக்கட்டளை சார்பில் முன்னெடுக்கப்படும் முயற்சியை அறிமுகப்படுத்த வாய்ப்பளித்த விஜய்க்கும், படக்குழுவிற்கும் ஏ.ஆர்.ரகுமான் தனது நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார்.