×

தளபதி விஜய் அம்மாவை சந்தித்த பிக் பாஸ் பிரபலங்கள்!

இரண்டாவது இடத்தை சாண்டியும், மூன்றாவது இடத்தை லாஸ்லியாவும் பிடித்தனர். பிக் பாஸ் போட்டியாளர்கள் நடிகர் விஜய்யின் தாய் ஷோபா சந்திரசேகரை சந்தித்துள்ள புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. பிக் பாஸ் 3 நிகழ்ச்சி கடந்த 105 நாட்களாக வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இறுதி போட்டியில் முகின் ராவ் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தை சாண்டியும், மூன்றாவது இடத்தை லாஸ்லியாவும் பிடித்தனர். பிக்பாஸ் போட்டியாளர்கள் தற்போது சகபோட்டியாளர்களுடன் நேரம் செலவிடுவது, அவர்களின் வீடுகளுக்கு
 

இரண்டாவது இடத்தை சாண்டியும், மூன்றாவது இடத்தை லாஸ்லியாவும் பிடித்தனர்.

பிக் பாஸ் போட்டியாளர்கள்  நடிகர் விஜய்யின் தாய்  ஷோபா சந்திரசேகரை சந்தித்துள்ள புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 

பிக் பாஸ்  3  நிகழ்ச்சி கடந்த 105 நாட்களாக வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இறுதி போட்டியில்  முகின் ராவ் டைட்டில்  வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தை சாண்டியும், மூன்றாவது இடத்தை லாஸ்லியாவும் பிடித்தனர். 

பிக்பாஸ் போட்டியாளர்கள்  தற்போது சகபோட்டியாளர்களுடன்  நேரம் செலவிடுவது, அவர்களின்  வீடுகளுக்கு செல்வது என அனைவரும் பிஸியாக  உள்ளனர். சமீபத்தில் சாண்டி  வீட்டில் முகின், கவின், தர்ஷன்,அபிராமிக்கு விருந்து, வனிதா வீட்டு  விசேஷத்தில் கலந்துகொண்ட லாஸ்லியா, சேரன் வீட்டுக்கு சென்ற ஷெரின், சாக்ஷி என அனைவரும் ஜாலியாக பொழுதைக் கழித்து  வருகின்றனர்.

இந்நிலையில் தர்ஷனும், அபிராமியும் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகரை சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

இந்த புகைப்படங்கள்  தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.