×

நடிகை திரிஷாவுடன் சிம்பு நியூ இயர் பார்ட்டி; வைரலாகும் புகைப்படம்!!

நடிகர் சிம்பு தனது திரைத்துறை நண்பர்களுடன் இணைந்து புத்தாண்டு கொண்டாடிய போது எடுத்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகிவருகிறது சென்னை: நடிகர் சிம்பு தனது திரைத்துறை நண்பர்களுடன் இணைந்து புத்தாண்டு கொண்டாடிய போது எடுத்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகிவருகிறது. ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தை தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்க்ஸை வெற்றிகரமாகத் தொடங்கியுள்ள நடிகர் சிம்பு, சுந்தர்.சி இயக்கத்தில் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று விரைவில்
 

நடிகர் சிம்பு தனது திரைத்துறை நண்பர்களுடன் இணைந்து புத்தாண்டு கொண்டாடிய போது எடுத்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகிவருகிறது

சென்னை: நடிகர் சிம்பு தனது திரைத்துறை நண்பர்களுடன் இணைந்து புத்தாண்டு கொண்டாடிய போது எடுத்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகிவருகிறது. 

‘செக்கச்சிவந்த வானம்’ படத்தை தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்க்ஸை வெற்றிகரமாகத் தொடங்கியுள்ள நடிகர் சிம்பு, சுந்தர்.சி இயக்கத்தில் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பாக்கப்படுகிறது. 

இதைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அரசியல் சார்ந்த காமெடி ஆக்‌ஷன் திரைப்படமாக ‘மாநாடு’ உருவாகவுள்ளது. அதற்காக உடல் எடையை குறைத்து பழைய கியூட் சிம்புவின் தோற்றத்திற்கு மாற பாங்காக்கில், தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறாராம். 

இந்நிலையில் பாங்காக்கில் பிஸியாக இருக்கும் சிம்பு, தனது திரைத்துறை நண்பர்களுடன் இணைந்து புத்தாண்டு கொண்டாடிய பொது எடுத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன .

அதில் அவருடன் கலந்து கொண்டு நடிகை திரிஷா,டான்ஸ் மாஸ்டர் காயத்ரி ரகுராம், நடிகை சோனியா அகர்வால், நிகழ்ச்சி தொகுப்பாளர் கீர்த்தி,வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் நடித்த நடிகை மேகா ஆகாஷ், இயக்குநர் வெங்கட் பிரபு,நடிகர் கார்த்தி,சிம்புவின் நண்பர்கள் ஆன ஹரிஷ் கல்யாண் மற்றும் மஹத் என ஏராளமானோர் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

 

அந்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவிவருகிறது.