×

பரத்துடன் ஜோடிபோடும் பிக்பாஸ் நடிகை . யாருன்னு கேட்டா அசந்துருவிங்க…

பரத் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் பிரபல பிக்பாஸ் புகழ் நடிகை ஜனனி ஐயர் நடிக்கிறார். நடிகர் பரத் நடித்து வெளி வந்த படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து வந்தன.இந்நிலையில் கடந்த ஆண்டு வெளியான காளிதாஸ் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து 8, நடுவண், ராதே, 6 ஹவர்ஸ், ஷணம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் இந்தி மற்றும் மலையாள படங்களும் அடங்கும். அடுத்து முழுநீள காதல் படமாக
 

பரத் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் பிரபல பிக்பாஸ் புகழ் நடிகை ஜனனி ஐயர் நடிக்கிறார்.

நடிகர் பரத் நடித்து வெளி வந்த படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து வந்தன.இந்நிலையில் கடந்த ஆண்டு வெளியான காளிதாஸ் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து 8, நடுவண், ராதே, 6 ஹவர்ஸ், ஷணம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் இந்தி மற்றும் மலையாள படங்களும் அடங்கும். அடுத்து முழுநீள காதல் படமாக உருவாகும் யாக்கை திரி என பல படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பரத் மோகன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் பரத்துக்கு பிக்பாஸ் புகழ் ஜனனி ஐயர் ஜோடியாக நடிக்கிறார். சோனாக்‌சி சிங் ராவட் என்ற பாலிவுட் நடிகையும் இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். மீரகி புரடக்‌ஷன் சார்பில் சபரீஷ் குமார் தயாரிக்கிறார். உணர்ச்சிப்பூர்வமிக்க கதைக்களத்துடன் இந்தப் படம் உருவாகிறது.

மேலும் பகவதி பெருமாள், நிரஞ்சனி, பிரதாப் போத்தன், பாண்டியராஜன், சுதா சந்திரன், கு.ஞானசம்பந்தம் ஆகியோரும் நடிக்கிறார்கள். பல்லு ஒளிப்பதிவு செய்ய அரோல் கரோலி இசையமைக்கிறார்.