×

பிக் பாஸ் பிரபலம் சுஜாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கமல்: வைரலாகும் புகைப்படம்!

பிக் பாஸ் பிரபலம் சுஜா வருணி – சிவாஜி தேவ் திருமணத்தில் பங்கேற்காத நடிகர் கமல் ஹாசன் அவர்களுக்கு விருந்தளித்து மகிழ்ந்துள்ளார். சென்னை: பிக் பாஸ் பிரபலம் சுஜா வருணி – சிவாஜி தேவ் திருமணத்தில் பங்கேற்காத நடிகர் கமல் ஹாசன் அவர்களுக்கு விருந்தளித்து மகிழ்ந்துள்ளார். பிக்பாஸ் முதல் சீசனில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நுழைந்தவர் நடிகை சுஜா வருணி. தமிழில் வெளியான கிடாரி, இரவுக்கு ஆயிரம் கண்கள், வா டீல் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இவரும்
 

பிக் பாஸ் பிரபலம் சுஜா வருணி – சிவாஜி தேவ் திருமணத்தில் பங்கேற்காத நடிகர் கமல் ஹாசன் அவர்களுக்கு விருந்தளித்து மகிழ்ந்துள்ளார்.

சென்னை: பிக் பாஸ் பிரபலம் சுஜா வருணி – சிவாஜி தேவ் திருமணத்தில் பங்கேற்காத நடிகர் கமல் ஹாசன் அவர்களுக்கு விருந்தளித்து மகிழ்ந்துள்ளார்.

பிக்பாஸ் முதல் சீசனில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நுழைந்தவர் நடிகை சுஜா வருணி. தமிழில் வெளியான கிடாரி, இரவுக்கு ஆயிரம் கண்கள், வா டீல் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இவரும் சிவாஜி கணேசனின் பேரனுமான சிவாஜி தேவ்வும் காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். இந்தத் திருமணத்தில் தான் கண்டிப்பாக கலந்து கொள்வதாக  கமல் வாக்குறுதி அளித்திருந்தார்.

ஆனால் கஜா புயல் ஆய்வு குறித்த பணிகளில் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் மேற்கொண்டதால் அவரால் சுஜா திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லை.  இருப்பினும் சுஜாவுக்கு கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற சுஜா-சிவகுமார் தம்பதிக்கு விருந்தளித்து தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.