×

பிப்ரவரியில் வெளியாகும் ‘ஜகமே தந்திரம்’ ரகிட ரகிட ரகிட மகிழ்ச்சியில் ரசிகர்கள்….

தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ படம் அடுத்த மாதம் ரிலீஸ் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷின் நடிப்பில் கர்ணன், ஜகமே தந்திரம் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இதையடுத்து தனுஷின் 43வது படத்தை கார்த்திக் நரேன் இயக்குகிறார் . சமீபத்தில்தான் இப்படத்தின் ஷுட்டிங் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தனுஷின் 40 வது படமான ஒய் நாட் ஸ்டூடியோஸ் சார்பில் சஷிகாந்த் தயாரித்துள்ள ஜகமே தந்திரம் அடுத்த மாதம்
 

தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ படம் அடுத்த மாதம் ரிலீஸ் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷின் நடிப்பில் கர்ணன், ஜகமே தந்திரம் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இதையடுத்து தனுஷின் 43வது படத்தை கார்த்திக் நரேன் இயக்குகிறார் . சமீபத்தில்தான் இப்படத்தின் ஷுட்டிங் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தனுஷின் 40 வது படமான ஒய் நாட் ஸ்டூடியோஸ் சார்பில் சஷிகாந்த் தயாரித்துள்ள ஜகமே தந்திரம் அடுத்த மாதம் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் தனுஷுக்கு ஜோடியாக, பிரபல மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார். பிரேவ் ஹார்ட், தி கிரோனிக்கல்ஸ் ஆப் நார்னியா, கேம்ஸ் ஆப் த்ரோன் உட்பட பல ஹாலிவுட் படங்களில் நடித்த ஜேம்ஸ் காஸ்மோ வில்லனாக நடித்திருக்கிறார். கலையரசன், மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், வடிவுக்கரசி, தேவன் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.

இந்த படத்தின் ரகிட ரகிட ரகிட பாடல் கடந்த ஜூலை மாதம் வெளியாகி வைரலானது. அடுத்து, புஜ்ஜி என்ற பாடல் வெளியிடப்பட்டது. இந்தப் பாடலும் ரசிகர்கள் மத்தியில் கவனிக்கப்பட்டது. பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இப்படம், மாஸ்டர் வெளியீட்டால் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் அடுத்த மாதம் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.