×

மகனுடன் கேம் ஆடும் விஜய்.. டிரெண்டாகும் புகைப்படம்…

நடிகர் விஜய் தனது மகன் சஞ்சய்யுடன் கேம் ஆடி மகிழும் போட்டோ தற்போது வெளியாகியுள்ளது. தளபதி என்று அன்போடு அழைக்கப்படும் நடிகர் விஜய்-க்கு தமிழ் திரையுலகில் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பிடித்த ஹூரோவாக இருப்பவர் நம்ம விஜய்தான். தமிழக மக்கள் மீது அதீத அன்பு கொண்ட விஜய், தனது ரசிகர் மன்றம் மூலம் இயன்ற உதவியை செய்து வருகிறார். சமீபகாலமாக தனது படங்களில் அரசியல் வசனங்கள் பேசிவதால் சீக்கிரம் அரசியலுக்கு வருவார்
 

நடிகர் விஜய் தனது மகன் சஞ்சய்யுடன் கேம் ஆடி மகிழும் போட்டோ தற்போது வெளியாகியுள்ளது.

தளபதி என்று அன்போடு அழைக்கப்படும் நடிகர் விஜய்-க்கு தமிழ் திரையுலகில் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பிடித்த ஹூரோவாக இருப்பவர் நம்ம விஜய்தான்.

தமிழக மக்கள் மீது அதீத அன்பு கொண்ட விஜய், தனது ரசிகர் மன்றம் மூலம் இயன்ற உதவியை செய்து வருகிறார். சமீபகாலமாக தனது படங்களில் அரசியல் வசனங்கள் பேசிவதால் சீக்கிரம் அரசியலுக்கு வருவார் என்று சொல்லப்படுகிறது.

பெரிய நடிகர்கள் பெரும்பாலும் பிசியாக இருப்பார்கள். அதனால் தன் குடும்பத்துடன் செலவிடும் நேரம் குறைவாக இருக்கும். ஆனால் விஜய், அதற்கு மாறாக தன் குடும்பத்துடன் எப்போதும் அதிக நேரம் செலவிடுவார். விஜய்-க்கு சஞ்சய் என்ற மகனும், திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளனர். இவர்களது புகைப்படங்கள் கூட எப்போதாவது சமூகவலைத்தளத்தில் வெளியாகி டிரெண்டாகும்.

நடிகர்களின் வாரிகள் பெரும்பாலும் நடிக்க வருவது சகஜமான ஒன்றுதான். அப்படி விஜய்யின் மகன் சஞ்சய், போக்கரிப்படத்தில் வரும் நடனமாடியிருப்பார். அதேபோன்று தெறிப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் மகள் திவ்யா சாஷா, ஒரு சீனில் விஜய்யுடன் நடித்திருப்பார்.

இந்நிலையில் நடிகர் விஜய், தன் மகன் சஞ்சய்யுடன் கேம் ஆடுவது போன்று போட்டோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் எப்போது எடுத்தது என்று தெரியவில்லை. இருந்தாலும் இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.