×

மாநாட்டில் சிம்புவை எதிர்க்கும் ஆக்‌ஷன் கிங்!

நடிகர் சிம்பு நடிக்கவிருக்கும் ‘மாநாடு’ திரைப்படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை: நடிகர் சிம்பு நடிக்கவிருக்கும் ‘மாநாடு’ திரைப்படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தை தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்க்ஸை வெற்றிகரமாக தொடங்கியுள்ள நடிகர் சிம்பு, சுந்தர்.சி இயக்கத்தில் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பொங்கல் ரிலீஸுக்கு இப்படம் தயாராகி வருகிறது.
 

நடிகர் சிம்பு நடிக்கவிருக்கும் ‘மாநாடு’ திரைப்படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: நடிகர் சிம்பு நடிக்கவிருக்கும் ‘மாநாடு’ திரைப்படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘செக்கச்சிவந்த வானம்’ படத்தை தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்க்ஸை வெற்றிகரமாக தொடங்கியுள்ள நடிகர் சிம்பு, சுந்தர்.சி இயக்கத்தில் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பொங்கல் ரிலீஸுக்கு இப்படம் தயாராகி வருகிறது.

இதைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அரசியல் சார்ந்த காமெடி ஆக்‌ஷன் திரைப்படமாக ‘மாநாடு’ உருவாகவுள்ளது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் காத்திருக்கும் இப்படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தில் சிம்புவை நேரடியாக எதிர்க்கும் மாஸ் வில்லனாக அர்ஜுன் நடிக்கவுள்ளாராம்.