×

மீண்டும் இணைந்தது தல – யுவன் மாஸ் கூட்டணி… உற்சாகத்தில் ரசிகர்கள்

சென்னை: நடிகர் அஜீத்தின் 59-வது படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார். நடிகர் அஜீத் – இயக்குநர் சிவா 4-வது முறையாக இணைந்திருக்கும் திரைப்படம் விஸ்வாசம். சத்யஜோதி தயாரித்திருக்கும் இப்படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இதனையடுத்து அஜீத்தை, சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படங்கள் மூலம் புகழ் பெற்ற இயக்குநர் வினோத் இயக்க இருக்கிறார். இத்திரைப்படத்தை நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க இருக்கிறார்.இதன் படப்பிடிப்பு நேற்று தொடங்கியதாகவும் இரண்டு நாட்கள் நடைபெற்று
 

சென்னை: நடிகர் அஜீத்தின் 59-வது படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார்.

நடிகர் அஜீத் – இயக்குநர் சிவா 4-வது முறையாக இணைந்திருக்கும் திரைப்படம் விஸ்வாசம். சத்யஜோதி தயாரித்திருக்கும் இப்படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இதனையடுத்து அஜீத்தை, சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படங்கள் மூலம் புகழ் பெற்ற இயக்குநர் வினோத் இயக்க இருக்கிறார். இத்திரைப்படத்தை நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க இருக்கிறார்.இதன் படப்பிடிப்பு நேற்று தொடங்கியதாகவும் இரண்டு நாட்கள் நடைபெற்று பின்னர் ஜனவரி மாதம் முதல் முழுவீச்சில் நடைபெறும் எனவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் திரைப்படத்தில் பணிபுரியும் மற்ற கலைஞர்கள் குறித்த தகவல்கள் வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில், நடிகர் அஜீத் நடிக்கும் 59-வது திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், பல வருடங்களுக்கு பிறகு அஜீத்துடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியளிக்கிறது என பதிவிட்டுள்ளார்.