×

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சர்கார்: நடிகர் விஜய் மீது வழக்கு பதிவு: உண்மை நிலவரம் என்ன?

சர்காரில் புகைபிடிக்கும் காட்சி போதைப்பொருள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதாகக் கூறி விஜய் மீது கேரளாவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கேரளா: சர்காரில் புகைபிடிக்கும் காட்சியை கண்டித்து நடிகர் விஜய் மீது கேரளாவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘சர்கார்’ திரைப்படம் கடும் சர்ச்சைகளைக் கடந்து தீபாவளிக்கு ரிலீசானது. சர்கார் படம் வெளியான இரண்டே நாட்களில் ரூ.100 கோடி வசூலித்து, கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதையடுத்து தமிழக அரசின் இலவச திட்டங்கள் குறித்து விமர்சிக்கப்பட்டிருப்பது உள்ளிட்ட
 

சர்காரில் புகைபிடிக்கும் காட்சி போதைப்பொருள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதாகக் கூறி விஜய் மீது கேரளாவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கேரளா: சர்காரில் புகைபிடிக்கும் காட்சியை கண்டித்து நடிகர் விஜய் மீது கேரளாவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான  ‘சர்கார்’ திரைப்படம் கடும் சர்ச்சைகளைக் கடந்து தீபாவளிக்கு ரிலீசானது. சர்கார் படம் வெளியான இரண்டே நாட்களில் ரூ.100 கோடி வசூலித்து, கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இதையடுத்து தமிழக அரசின் இலவச திட்டங்கள் குறித்து விமர்சிக்கப்பட்டிருப்பது உள்ளிட்ட விஷயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக-வினர் போராட்டம் நடத்தி  வந்தனர். இதையடுத்து மறு தணிக்கை செய்யப்பட்ட இப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சர்கார் படத்தின் வெற்றிவிழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதில் நடிகர் விஜய், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகைகள் வரலட்சுமி, கீர்த்தி சுரேஷ், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர். 

இந்நிலையில் சர்கார் படத்திற்கு கேரளாவில் புதிய பிரச்னை கிளம்பியுள்ளது. சர்கார் படத்தில் இடம்பிடித்திருக்கும் விஜய் புகைபிடிக்கும் காட்சி போதைப்பொருள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதாகக்கூறி திருச்சூர் சுகாதாரத்துறை வழக்கு தொடர்ந்துள்ளது. இதன் காரணமாக சர்கார் நாயகன் விஜய் மற்றும் தயாரிப்பு நிறுவனம் சான் பிக்சர்ஸ் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.