×

‘டாக்டர்’ படக்குழுவின் டீசர் சர்ப்ரைஸ்… ரசிகர்கள் மகிழ்ச்சி!

‘டாக்டர்’ படத்தின் டீசர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளில் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ‘டாக்டர்’. நயன்தாரா நடித்து வெற்றி பெற்ற கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலிப்குமார் இப்படத்தை இயக்குகிறார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை பிரியங்கா நடிக்கிறார். கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்தில் காமெடி நடிகர் யோகிபாபு, நடிகர் வினய் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும்
 

‘டாக்டர்’ படத்தின் டீசர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளில் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ‘டாக்டர்’. நயன்தாரா நடித்து வெற்றி பெற்ற கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலிப்குமார் இப்படத்தை இயக்குகிறார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை பிரியங்கா நடிக்கிறார். கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன் தயாரிக்கும் இப்படத்தில் காமெடி நடிகர் யோகிபாபு, நடிகர் வினய் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடிக்கின்றனர்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் ஏற்கனவே ஒரு பாடல் வெளியிடப்பட்டுள்ளது. டிக் டாக் தடை குறித்து இடம் பெற்ற பாடல் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்துள்ள நிலையில் எடிட்டிங் பணிகள் நடைபெற்று வந்ததது.

இந்நிலையில் டாக்டர் படத்தின் டீசர் வெளியிட்டு தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதில் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான பிப்ரவரி 17-ம் தேதியன்று டீசரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.